Check if a Javascript Function Exists or Is Defined
To check if a Javascript function exists before calling it, try this:
if(typeof yourFunctionName == 'function') {
yourFunctionName();
}
php,mysql,ajax hints
To check if a Javascript function exists before calling it, try this:
if(typeof yourFunctionName == 'function') {
yourFunctionName();
}
எக்ஸ்க்ளுசிவ்: தீவிரவாதிகளின் உரையாடல்
யாரையோ கிண்டல் செய்ய வேண்டும், நக்கல் செய்ய வேண்டும் என்றஎண்ணத்தில் நையாண்டி நோக்கில் எழுதப்படவில்லை. நடப்பதை கண்டுவலியிலும், கோபத்திலும் எழுதியது.
தீவிரவாதி 1: நாம பனிரெண்டு பேர அனுப்பி, இருநூறு மக்களைகொன்னுருக்கோம். ஆனா இந்திய அரசு, தீவிரவாதிகளுடனான போரில்வெற்றி, சதி முறியடிப்பு பேசிக்கிறாங்களே?
தீவிரவாதி 2: அதான் எனக்கும் புரியல. டிபன் பாக்ஸ்ல குண்டு வச்சோம். ஒருமாசத்துல மறந்திட்டாங்க. சைக்கிள்ள குண்டு வச்சோம். ரெண்டு மாசத்துலமறந்திட்டாங்க. என்ன பண்ணினாலும் அதிகபட்சம் மூணு மாசத்துலமறந்திடுறாங்க.
தீவிரவாதி 1: அதனால தான் இந்த தடவை, ஏழை, நடுத்தர மக்களைவிட்டுட்டு, இந்திய அரசு அக்கறை எடுத்துக்கிற மேல்தட்டு மக்களைதாக்குனோம்.
தீவிரவாதி 2: அதுக்கும் எந்த விதமான பிரயோஜனம் இருக்குற மாதிரி இல்ல.நாம நடத்தின தாக்குதல வச்சி அரசியல்வாதிங்க இப்பவே அவனுங்களுக்காகஒட்டு பொறுக்க ஆரம்பிச்சிட்டாங்க.
தீவிரவாதி 1: எனக்கென்னமோ, ஒரு நல்ல விஷயம் நடக்குற மாதிரிஇருக்குது.
தீவிரவாதி 2: என்ன?
தீவிரவாதி 1: ஏதோ, தகவல் பரிமாறிக்கணும்'ன்னு நம்ம பாகிஸ்தான்ஐ.எஸ்.ஐ. தலைவர கூப்பிட்டு இருக்காங்க. போயிட்டு வந்ததும், அவர்கிட்டஎன்ன ஏதுன்னு கேட்டுட்டு அடுத்த முறை அதுக்கு ஏத்த மாதிரி பிளான்பண்ணனும். மாட்டிக்க கூடாது.
தீவிரவாதி 2: மாட்டினாலும் பிரச்சனை இல்லை. ஏன்னு சொல்லு?
தீவிரவாதி 1 (யோசித்துவிட்டு): கருணை மனு போட்டுட்டு வெளியவந்திடலாம். அதானே? சரியா?
தீவிரவாதி 2: ஆமாம். ஆமாம். அதே மாதிரி, அடுத்த முறை இந்தியாவுலகொஞ்சம் ஆளுங்கள நமக்காக ஏற்பாடு பண்ணினா போதும்.
தீவிரவாதி 1: ஏன்?
தீவிரவாதி 2: நமக்காக வேல பார்க்க, நிறைய டிவி சானல்கள் இருக்காங்க.நம்மளோட சாட்டிலைட் போன் மூலமா, பேச மட்டும்தான் முடியுது. ஆனா,அவுங்க நமக்காக லைவ் டெலிகாஸ்ட்'யே பண்றாங்க.
அது மட்டும் இல்லாம, கமாண்டர்ஸ் கிட்ட பேசி என்ன பிளான்னு கேட்டும்சொல்றாங்க. ரொம்ப யூஸ்புல்லா இருக்கு.
தீவிரவாதி 1: கரெக்ட். அடுத்து எங்க டார்கெட் பண்ணலாம்? சவுத் இந்தியாவுலபண்ணிரலாமா?
சென்னை எப்படி?
தீவிரவாதி 2: அங்க வேண்டாம்.
தீவிரவாதி 1: ஏன்?
தீவிரவாதி 2: நாம கஷ்டப்பட்டு குண்டு வைப்போம். ஆனா அங்க இருக்குறஅரசியல்வாதிகள் குண்டு வச்சது யாருன்னு அவுங்களுக்குள்ள அடிச்சிக்குவாங்க.ஆளுங்கட்சி, எதிர்கட்சியை சொல்லுவாங்க.
எதிர்க்கட்சி, ஆளுங்கட்சியை சொல்லுவாங்க. கடைசில நம்மளமறந்திடுவாங்க.
தீவிரவாதி 1: ஒ!
தீவிரவாதி 2: அதுமட்டும் இல்ல. டிவிக்காரங்களும், இந்த அளவுக்குஉதவுவாங்கன்னு சொல்ல முடியாது. அவுங்கவுங்க கட்சிகாரங்களையும்,சினிமாகாரங்களையும் பேட்டி கண்டுட்டு இருப்பாங்க.
தீவிரவாதி 1: இப்பதான் ஒரு தாக்குதல் பண்ணிருக்கோம். அதுக்குள்ளேஇன்னொன்னு பண்ண முடியுமா?
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல எடுத்திருப்பாங்களே?
தீவிரவாதி 2: கடல் வழியா வந்தோம்னு எல்லா துறைமுகத்திலையும்பாதுகாப்பு அதிகரிச்சிருக்காங்களாம். ஹோட்டல்'ல தாக்குதல்பண்ணிருக்கோம்னு எல்லா ஹோட்டல்'லையும் பாதுகாப்ப அதிகரிக்க சொல்லிஇருக்காங்களாம். இவனுங்க எப்பவும் இப்படித்தான். கோவில அடிச்சாகோவிலுக்கு பாதுகாப்பு. மார்க்கெட்ட அடிச்சா மார்க்கெட்டுக்கு பாதுகாப்பு.தியேட்டர அடிச்சா தியேட்டர்களுக்கு பாதுகாப்பு. நாம என்ன அடிச்ச எடத்தையாஇருப்பி அடிப்போம்?
தீவிரவாதி 1: அதானே? ஆனாலும் எனக்கு வர வர வன்முறை மேலநம்பிக்கையே போயிடுச்சி.
தீவிரவாதி 2: ஏன்?
தீவிரவாதி 1: எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாங்க. இந்தியா ரொம்ம்ம்பபபபநல்ல நாடுப்பா...
அவனுங்களே வெறுத்து சோர்ந்து தீவிரவாதத்தை விட்டாதான் உண்டு.