Sun Tv new Comedy Channel
24 மணி நேரமும் மக்களைச் சிரிக்க வைக்க ஒரு புதிய சேனலை சன் நெட்வொர்க் நாளை முதல் அறிமுகப்படுத்துகிறது. இதன் பெயர் காமெடித் திரை.
இந்த சிரிப்புச் சேனலில் முழுக்க முழுக்க சிரிப்புத் துணுக்குகள், நகைச் சுவைக் காட்சிகள், நகைச்சுவைத் திரைப்படங்கள், மற்றும் தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளன.
சன் குழுமத்துக்கு ஏற்கெனவே சன்டிவி, கேடிவி, சன் நியூஸ், சுட்டி டிவி, சன் மியூசிக் ஆகிய 5 தமிழ் சேனல்கள் உள்ளன. இப்போது ஆறாவதாக காமெடித் திரை ஆரம்பமாகிறது.
தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் ஏராளமான சேனல்களை நிர்வகித்து வருகிறது சன் குழுமம்.
கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிறுவர்கள் தொலைக்காட்சியான சுட்டி டிவிக்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து இந்தப் புதிய முயற்சியில் இறங்கியுள்ளதாக சன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சூரியனைப் பார்த்து நாய் குலைக்கிறது என்பார்கள் கிராமத்துப் பக்கம். ஆனால் இனிமேல் 'சன்'னைப் பார்த்து எல்லோரும் வாய் விட்டு சிரிக்கலாம்!
More info: http://thatstamil.oneindia.in/movies/specials/2008/09/07-sun-tv-to-launch-its-comedy-channel-from-tomorrow.html
Sunday, September 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment