Thursday, May 7, 2009

Mobile SMS Jokes

Tamil SMS Jokes :
வரும்போது என்னத்தைக் கொண்டு வந்தோம். போகும்போதுஎன்னத்தைக்கொண்டு போகப் போறோம்?னு நீ டயலாக் விடும்போது, எல்லாரும் உன்மூஞ்சியைப் பார்த்தாங்க. நான் மட்டும்தான் உன் காலைப் பார்த்தேன்.

எங்கேயிருந்துடா சுட்டே அந்த புது செருப்பை!



என்ன மாமூ...
புதுசுபுதுசா தினுசுதினுசா
இவ்வளவு பர்ஸ்-வெச்சிருக்கே.
ஒருவேளை கண்டதும் சுட உத்தரவு-னு
பேப்பர்ல போட்டிருந்த செய்தியை
நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்டியா என்ன?!



__________________________________________-



அமெரிக்கா போகப் போறேன்...
சிங்கப்பூர் போகப் போறேன்Õனு
சொல்லிட்டிருக்கியாமே!
முதல்ல, அங்கேயெல்லாம் பிச்சை
எடுக்கிறது சட்டப்படி குற்றமா...
இல்லையானு தெரிஞ்சு வெச்சுக்கடா...
பின்னால பிரச்னை ஆகிடப் போவுது!



கர்நாடிக் பாட்டுக்கு எம்.எஸ்.எஸ்,
சினிமாப் பாட்டுக்கு டி.எம்.எஸ்,
தபால் அனுப்புறதுக்கு ஆர்.எம்.எஸ்.
உன்னை மாதிரி வெட்டிப்பய
படிக்கிறதுக்குத்தாண்டா எஸ்.எம்.எஸ்.





நான் உமி கொண்டு வர்றேன். நீ அரிசி
கொண்டு வா. இரண்டு பேரும் சேர்ந்து
ஊதி ஊதித் தின்போம் இது பழசு.

நான் மிஸ்டு கால் உட்றேன். நீ கால் பண்ணு.
ரெண்டு பேரும் கடலை போடலாம் இது புதுசு



ஓரணா ரெண்டணா உண்டியலை உடைச்சு
நாலணா எட்டணா கடனை உடனை வாங்கி
அண்டா குண்டா அடகு வெச்சு
பிரிபெய்டு கார்டு வாங்கி எஸ்.எம்.எஸ் அனுப்புறேன்
பதில் அனுப்புறது...?





நாளை அதிகாலையில் வந்துவிடு நண்பா! என்னை நரி முகத்தில் விழிக்கச் சொல்லியிருக்கிறார் ஜோசியர்!



நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சொல்லட்டுமா? புத்தகம் படிக்கிறீர்கள்.. இல்லை!.. ஓ... கண்டுபிடித்துவிட்டேன்.. என்னுடைய எஸ்.எம்.எஸ் படிக்கிறீர்கள்!



இந்த எஸ்எம்எஸை ஸ்மெல் பன்னு
உனக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா?
என்னது இல்லையா?
அதுசரி, சும்மாவா சொன்னாங்க
"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!!!"





மாயி அண்ணன் SMS அனுப்பினாக...

மாப்பிள்ளை மொக்கசாமி SMS அனுப்பினாக...

மற்றும் நம் உறவினரெல்லாம் SMS அனுப்பினாக...

நீ மட்டும் SMS அனுப்பவே இல்லையே...

அனுப்பும்மா மின்னல்!!

No comments:

Post a Comment