Sunday, July 19, 2009

E - Passport

அரசாங்கம் E - Passport தரப்போகிறது. (E - Agents பிரச்சினை இருக்காதே!) கடந்த ஆண்டு அறிவிப்பு. இப்போது செயல்பாட்டில். Diplomats என்ற பிரிவினருக்கு முதலில் வழங்கப்படுகிறது. 2010 செப்டம்பர் முதல் Common Man எனப்படும் சாதாரண மக்களுக்கும் சிக்கலில்லாமல் கிடைக்கும் என்கிறது அறிவிப்பு. கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற அறிமுக விழாவில் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் துணைப் பிரதமர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

E - Passport ?

வழக்கமான பாஸ்போர்ட் போலத்தான். நம்மைப் பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரு சிப் இணைக்கப்பட்டிருக்கும். (Biometric Passport என்றும் அழைக்கப்படுகிறது.)

Immigration பணிகள் இதனால் துரிதமாகும்.

Central Passport Organisation, New Delhi, India Security Press, Nashik, and the Indian Institute of Technology (IIT), Kanpur இவர்கள் வடிவமைத்தவர்கள்.

உள்ளிருக்கும் சிப், சாதாரணப் பாஸ்போர்ட்களைவிட தெளிவான, பிழையற்ற தகவல்கள் தரும். முறைகேடுகளுக்கு வாய்ப்பிருக்காது. (இறந்தவர் பெயரில் பயணிக்கும் அவலம் இனி இல்லை என்று கருதப்படுகிறது.).

இதுவரை 41 நாடுகள் E - Passport பயன்படுத்துகிறது.

2010 க்குள் 80000 பாஸ்போர்ட்கள் விநியோகிக்க ஏற்பாடு.

இந்திய அரசின் பாஸ்போர்ட் இணையதளத்தின் லிங்க் கீழே. விருப்பமுள்ளவர்கள் உடனே (தளத்தை Hack செய்வதற்குள்) அணுகிப் பயன்பெறவும்.


http://passport.gov.in/pms/OnlineRegistration.jsp?pocode=AHD

No comments:

Post a Comment