Thursday, October 9, 2008

Fwd: நகைச்சுவை



நிரூபர் : வரப் போற தேர்தல்ல, எந்தக் கட்சியோட கூட்டணி வைச்சுக்கப் போறீங்க தலைவரே!

தலைவர் : எதிர்க்கட்சிகளிடம் கொட்டேஷன் கேட்டிருக்கிறோம்! வந்ததுக்கப்புறம் முடிவு எடுப்போம்!

******

ரமேஷ் :இந்தாப்பா சர்வர்! சர்க்கரை இல்லாத காபி கொண்டு வா.

சர்வர் : சரி சார்.

ரமேஷ் : அந்த காபிக்குப் போட வேண்டிய சர்க்கரையைத் தனியா பார்சல் கட்டிக் கொடுத்துடு.

******

டாக்டர் : உன்னோட ரத்த அழுத்தம் அபாய கட்டத்துல இருக்கு.

ரமேஷ் : நான் என்ன செய்யணும் டாக்டர்?

டாக்டர் :நீ அசையக் கூடாது. பணம் எங்கே இருக்குன்னு சொல்லு, நானே எடுத்துக்கறேன்

******

கபாலி : மரியாதையா எல்லா நகைகளையும் கழட்டிக் கொடு.

இல்லத்தரசி : (டி.வி. பார்த்துக் கொண்டே) இருப்பா! விளம்பர இடைவேளை வரட்டும்!

******

அமைதிப் பேச்சுவார்த்தைங்கிறதைத் தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க போல இருக்கு!

எப்படிச் சொல்றே?

ஒருத்தருக்கொருத்தர் குசுகுசுன்னு அமைதியா பேசிக்கிறாங்களே!

******

ரமேஷ் : என்ன சார் இது, சாப்பாடு சாப்பிட்டு முடிச்சதுக்கப்புறம், சிக்கனைத் தனியா சாப்பிடறீங்க?

சுரேஷ்: என்ன பண்றது, டாக்டர் என்னைச் சாப்பாட்டில் சிக்கன் சேர்த்துக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கிறாரே.

******

வாணி : ஏய் மண்டு! புத்தகத்த எதுக்கு கொண்டு போய் பிரிட்ஜ்ல வச்சிருக்க?

ராணி : நான் ஒண்ணும் மண்டு இல்ல! என் படிப்பு "கெட்டு"ப்போயிடக்கூடாதுன்னு நீதான சொன்ன.

******

ஏங்க, அந்தக் கடையில, ஒரு புடவை வாங்கினா, ரெண்டு ஜாக்கெட் பிட் இலவசமா தர்றாங்களாம்!

அதுக்கென்ன இப்ப?

வாங்க, உங்க அம்மாவுக்கு ரெண்டு ஜாக்கெட் பிட் வாங்கணும்!

******

No comments:

Post a Comment