அவளும் மொக்கை மீது அன்பாகவே இருந்தாள். இருவரும் சேர்ந்து சுற்றாத இடம் இல்லை. போகாத தியேட்டர் இல்லை.சுமார் 5 ஆண்டுகள் இந்தத் தொடர்பு நீடித்தது. ஆனால் மொக்கையை காதலிக்கிறாளா என்பது கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது.
மொக்கை இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அவளை நேரடியாகவே கேட்டுவிடுவது என்று முடிவு செய்தார். ஆனாலும் முகத்துக்கு முகம் கேட்க தயங்கிய மொக்கை, தொலைபேசியில் கேட்டுவிடுவது என்று திட்டமிட்டார். அதன்படி அவள் வீட்டுக்கு போன் செய்ய, அவளே எடுத்தாள்..
மொக்கை : ஹலோ.. அபித குஜாம்பிகைதானே..?
அபி : ஆமாம்.. அபிதான் பேசறேன்.. என்ன உன் குரல் நடுங்கறாப்பல தெரியுது..?
மொக்கை : ஹி..ஹி.. நான் உன்னை காதலிக்கிறேன்..
அபி : தெரியும்..
மொக்கை : நீ என்னைக் காதலிக்கிறாயா..?
அபி : அதில் என்ன சந்தேகம்..?
மொக்கை : கடவுளுக்கு நன்றி..! அப்போ நாம திருமணம் செய்துக்கலாமா..?
அபி : நிச்சயமா..!
மொக்கை : எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொல்லேன் ப்ளீஸ்..
--
2 comments:
பாவம் மொக்க! இப்படி ஒரு அதிர்ச்சியா!
ரொம்ப நேரம் சிரித்தேன். நன்றி :)
Post a Comment