Saturday, August 23, 2008

Tamil jokes





  •  செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா,   நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது .

         --- தீவிரமாக யோசிப்போர் சங்கம்
              (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது )

  • இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.

         சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம் ..s

        ஆனாகடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

-        -------- ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து  யோசிப்போர் சங்கம்

 

  • என்னதான் மனுசனுக்கு வீடு ,வாசல் , காடு , கரைன்னு எல்லாம்
    இருந்தாலும் ,       ரயிலேறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும் .

             இதுதான் வாழ்க்கை .

 

  • பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் . ஆனாஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ?

         நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது !!!

 

  • என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !!

         அதேமாதிரி,

         என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,  லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!!

 

  • டிசம்பர் 31 க்கும்ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம் .

        ஆனால்ஜனவரி 1 க்கும்டிசம்பர் 31 க்கும்ஒரு வருசம்      வித்தியாசம்இதுதான் உலகம்.

 

  • பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் .

       ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் ..

       சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் .   ஆனா...

      கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ??

      யோசிக்கனும்............ ...!!

 

தத்துவம் 1:

இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம் .

ஆனா

பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

தத்துவம் 2:

ஆட்டோக்கு ' ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும் ,

மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும் .

தத்துவம் 3:

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் ,

ஆனா

இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது !

(என்ன கொடுமை சார் இது !?!)

தத்துவம் 4:

வாழை மரம் தார் போடும்
ஆனா.......  அதை வச்சு ரோடு போட முடியாது!

(ஹலோ ! ஹலோ !!!!)

தத்துவம் 5:

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம் ,

ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?

இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?

(டேய் ! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!)

தத்துவம் 6:

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ...

சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும் ,

அதுக்காக, மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ?

(ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க!!!)

 

  • பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் ,

        கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகனும்.

 

  • கொலுசு போட்டா சத்தம் வரும் .   ஆனா,

          சத்தம் போட்ட கொலுசு வருமா ?

 

  • பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,

             ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .

              இதுதான் உலகம்

 

  • T Nagar போனா டீ வாங்கலாம் .

          ஆனால்....... விருதுநகர் போனா விருது வாங்க  முடியுமா?

 

  • என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா,

          திருப்பி அடிக்க முடியாது .

 

  •  இளநீர்லயும் தண்ணி இருக்கு,..... பூமிலயும் தண்ணி இருக்கு.... .

           அதுக்காக,

          இளநீர்ல போர் போடவும் முடியாது ,

           பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது ..

 

  • உங்கள் உடம்பில்  கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்
    ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது .

 

  • ஓடுற எலி வாலை புடிச்சா............ .நீ ' கிங்'கு

         ஆனா.........தூங்குற புலி வாலை மிதிச்சா......  உனக்கு சங்கு....

 

  • நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்

           ஆனா...... ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது .

 

  • வண்டி இல்லாமல் டயர் ஓடும் .
    ஆனால்............டயர் இல்லாமல் வண்டி ஓடுமா ?

        (இது மல்லாக்கபடுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.)

  • சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா.....   ட்ரெய்ன்  ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல.......... பிளேன் ஓட்டுறது பிளானிங்கா ?
  • என்னதான் நீ புது மாடல் மொபைல்  வச்சிருந்தாலும்  மெஸேஜ் Forward தான் பண்ண முடியும்.....  Rewindலாம் பண்ண முடியாது ..

 

  • "Tea"க்கும் "Cofee"க்கும்  என்ன வித்தியாசம்?........ "Tea" ஒரு "e" இருக்கும்.
    "Coffee" 2 "e" இருக்கும்.
     
 

 


__._,_.___

No comments:

Post a Comment